Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகள் முன் நிர்வாணம்….. ‘கதகளி’ பட வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி….. போக்சோ பிரிவில் கைது…..!!!!

குழந்தைகள் முன்பாக நிர்வாணமாக நின்றதாக நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை மேற்கு போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சூர் எஸ்.என் பார்க் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு 11 மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகள் முன்பு நிர்வாணமாக தோன்றியுள்ளார். குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர். அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவரை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

பின்னர் போலீசில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிசிடிவி காட்சிகளை வைத்து நிர்வாணமாக நின்றது ஸ்ரீஜித் ரவி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். குழந்தைகளும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. 2016 ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமிகளை அணுகி காரின் டிரைவர் இருக்கையில் நிர்வாணத்தை காட்டி குழந்தைகளுடன் செல்பி எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புகாரில் கைதாகி உள்ளார்.

Categories

Tech |