Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த சம்பவம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரிபட்டி கிராமத்தில் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் தண்ணாயிரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த கவின்(21), சேதுபதி(21) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் இணைந்து கோவிலில் கொள்ளையடித்து சென்றது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |