வீட்டை ஒட்டியுள்ள கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசமானது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த நீதி என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நீதி மற்றும் அவரின் மனைவி லட்சுமி பின் வாசல் வழியாக வெளியேறி உயிர்தப்பினார்கள்.
பின் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் கொட்டகையில் பற்றி எறிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மொபட், அரிசி மற்றும் தேங்காய் முட்டைகள், தீவன மூட்டைகள், மின் மீட்டர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எறிந்து நாசமானது. இதையடுத்து போலீசாருக்கு கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இந்தநிலையில் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.