Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பள்ளிபாளையம் அருகே நூர்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலக்கிறது”…. கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்….!!!!!

பள்ளிபாளையம் அருகே நூற்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலப்பதால் இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் வெப்படை அடுத்துள்ள பாதரைப் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது சாக்கடையில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது.

இதனால் நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலப்பதை கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் பாதரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து போலீசார், தாசில்தார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது சாக்கடைகளில் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிய பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Categories

Tech |