நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வு தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுகளின் முடிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
அதில் செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், 62% மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.