தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், உழவர் சந்தை, வாரச்சந்தை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் பிடிக்கப்படும். இந்த நடைமுறைகளை மாநகராட்சியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.