Categories
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்: இனி எதிர் அணியினர் எங்கள பார்த்து பயப்படுவாங்க…. பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்….!!!!

டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டிபிடித்த பின் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது “வீரர்கள் இதுபோன்று விளையாடும்போது என் பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு இருந்தால் இத்தகைய இலக்கை அடைவது எளிதாகும். கடந்த 5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது பயத்தை அளித்திருக்கும்.

எனினும் தற்போது எல்லாமே நன்றாக உள்ளது. இந்த அனைத்து பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும். இங்கிலாந்துநாட்டு மண்ணில் எவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடவேண்டும் என்பதில் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கிறோம். எங்களின் பலவிதமான திட்டமிடல் அனைத்தும் 5 வாரத்துக்கு முன் இருந்து துவங்கியது. டெஸ்ட் கிரிக்கெட் எவ்வாறு விளையாடப்படுகிறது என்பதை மாற்றியெழுத முயற்சி செய்கிறோம்.

இதுபோன்று விளையாடும்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புது ரசிகர்களை கொண்டுவர இயலும் என நினைக்கிறேன். அத்துடன் எங்களது அதிரடியான அணுகு முறையை கண்டு இனிமேல் 3வது இன்னிங்சில் எதிர் அணியினர் அஞ்சுவார்கள். அதாவது எவ்வளவு இலக்கு நிர்ணயம் செய்தால் போதுமானதாக இருக்கும். நாங்கள் 4-வது இன்னிங்சில் எந்த மாதிரி விளையாடுவோம் என்பதில் தெளிவுகிடைக்காமல் குழம்புவார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

Categories

Tech |