மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்பிறகு சேலையாறு அணைக்கு வினாடிக்கு 2676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.மேலும் மண்சரிவின் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.