இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜயவாடாவில் 41 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தல என்று செல்லமாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு மிகவும் பிரபலமானவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று இந்தியாவின் கனவை நினைவாக்கினார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் களம் இறங்கி விளையாடி வருகிறார். தோனி எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இவர் எங்கு செல்கிறார்? எங்கு உள்ளார்? என்பது குறித்த தகவல்கள் அனைத்தையும் அவர் தனது சமூக வலைதளங்களில் தெரிவித்து விடுவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேந்திர சிங் தோனி மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இதற்காக சிகிச்சை எடுப்பதற்கு அவரது சொந்த மாநிலமான ராஞ்சியிலிருந்து 70 km தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் நாட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில் நாளை எம் எஸ் தோனியின் 41 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. இதனால் விஜயவாடாவில் 41 அடியில் கட்டோடு வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். மேலும் பலரும் தல தோனிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.