கார் ஓட்டுநரிடம் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மதுரவாயில்-தாம்பரம் பைபாஸ் ரோட்டில் போரூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவர் சாலையில் வரும் ஒரு காரை நிறுத்தி தனக்கு லிப்ட் தருமாறு கேட்டுள்ளார். உடனே கார் ஓட்டுனரும் அந்த இளம் பெண்ணை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல் கார் ஓட்டுனரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 2000 பணத்தை பறித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு வாகன ஓட்டி சுங்கச்சாவடியில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மர்ம கும்பலை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த இளம் பெண் மட்டும் வசமாக காவல்துறையினிடம் சிக்கிக் கொண்டார். அதன்பிறகு காவல்துறையினர் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் விபச்சார தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் நேற்று முன்தினம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பல் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் சாலையில் வரும் கார்களை நிறுத்தி லிப்ட் கேட்குமாறு மிரட்டியுள்ளனர். எனவே இளம் பெண்ணும் அவர்கள் கூறியது போன்று சாலையில் வரும் காரை நிறுத்து லிப்ட் கேட்பது போல் நடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இளம்பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியதுடன் மர்ம கும்பல் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.