இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசுதான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. அப்போது மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதிவிலிருந்து விலகி ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இதனையடுத்து புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு இந்த அளவிற்கு நெருக்கடி இருக்காது என்று மக்கள் எதிர்பாத்தனர். ஆனால் நாளுக்கு நாள் கூடுதலான தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு அளவிற்கு எரிபொருள் உபயோகத்தை குறைக்கும் வகையில் இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக காலை 8 மணி முதல் மதியம் 1மணி வரை மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.