Categories
சினிமா தமிழ் சினிமா

“உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!!!

பிரபல நடிகை ஒருவர் தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் உலக நாயகனின் மகள் சுருதிஹாசன் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனக்கு பி.சி.ஓ.எஸ் என்ற பிரச்சனை இருப்பதாக கூறி இருந்தார்.

இந்த பிரச்சனையால் ஸ்ருதிஹாசனின் உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ருதிஹாசன் தற்போது ஒரு பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தான் நன்றாக இருப்பதாகவும் என்னுடைய உடலில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் நடிகை சுருதிஹாசனின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |