Categories
மாநில செய்திகள்

விலங்குகளின் பால் மூலம்…. காசநோய் பரவும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

காச நோயானது விலங்குகளுக்கும் பரவும் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காசநோய் குறித்து ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர். இதுபற்றி ஐ.சி.எம்.ஆர் மற்றும் என்.ஐ.ஆர்டியின் டாக்டர் ஸ்ரீராம் கூறியுள்ளார். அவர் கால்நடைகளில் காச நோய்க்கான மைக்ரோபாக்ட்ரீயம் இருப்பதாக கூறியுள்ளார். இந்த காச நோயானது காற்றில் பரவும் நோய் என்பதால் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் துளிகள் மூலமாக மற்றவர்களுக்கும் பரவுகிறது.

இந்த எச்சில் துளிகள் மூலமாக மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் காச நோயானது பரவும். இந்நிலையில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும்  பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு பெரும்பாலும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் மற்றும் இறைச்சி கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிக அளவில் பரவுகிறது. இதனையடுத்து காச நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மாட்டின் பால் மூலமாகவும் காச நோயானது பரவுகிறது.

எனவே பாலை பதப்படுத்தாமல் அதாவது பாஸ்டுரைஷேசன் செய்யாமல் உட்கொண்டால் கண்டிப்பாக மனிதர்களுக்கு காச நோய் வந்துவிடும். அதன்பிறகு வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளிடம் மட்டுமின்றி யானைகளிடத்திலும் மைக்ரோபாக்டீரியாவானது இருக்கிறது. மேலும் காச நோயை மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் முற்றிலுமாக ஒழிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |