தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சமடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை,கோவை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் வேகமேடுத்துள்ளது.இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் இதனை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் பேருந்துகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மாஸ்க் அணிய வேண்டும். மாநகர பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.