Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை விமர்சித்த ஆஸ்கர் நாயகன்”…. விளாசி வரும் நெட்டிசன்ஸ்….!!!!!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை விமர்சனம் செய்த ரசூல் பூக்குட்டியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே நாளில் ரூபாய் 250 கோடி வசூலித்தது.

அனைத்து மொழி ரசிகர்களையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கவர்ந்தது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி இணையத்தில் இத்திரைப்படத்தை விமர்சித்து கூறியுள்ளதாவது ஆலியா பட்டை ஒரு பொருள் போல பயன்படுத்தி இருக்கின்றார்கள் என கூறியிருந்தார். இதற்கு பலரும் அவரை விளாசி வருகின்றனர். இது குறித்து நெட்டிசன்கள் கூறி இருப்பதாவது, ஆஸ்கர் நாயகனிடம் இருந்து இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. இத்திரைப்படம் ஓரின சேர்க்கையாளர்களின் படமாக இருந்தாலும் தவறு எதுவும் இல்லையே. இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி விமர்சிப்பீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பொறாமையில் பேசுகிறீர்களா..? இவருக்கா ஆஸ்கார் விருது கொடுத்தார்கள் என விளாசி வருகின்றனர்.

 

Categories

Tech |