Categories
மாநில செய்திகள்

இரண்டாக பிரியுமா தமிழகம்?…. பா.ஜ.க கூறுவது என்ன?…. அரசியலில் பரபரப்பு…..!!!!

தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க-வினர் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ. நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாக ரீதியாக அதிகமான திட்டங்களை பெற இயலும்” என பேசி இருக்கிறார்.

அ.தி.மு.க விவகாரத்தில் பா.ஜ.க எப்போதுமே நடுநிலையாக நடந்துகொள்ளும் என நெல்லையில் நடந்த போராட்டத்தின்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டிற்கு தனி நாடு அந்தஸ்து வேண்டுமென ஆ.ராசா கூறுகிறார். ஏன் நான் சொல்கிறேன் தமிழகத்தை பாண்டியநாடு, பல்லவநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.

அதன்பின் போராட்டத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து ஆகும். என்னை பொறுத்தவரையிலும் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்து இருக்கிறது.  ஆகவே தமிழகத்தை நிர்வாகரீதியாக இரண்டாக பிரித்தால் அதிகமான திட்டங்களை பெற இயலும்” என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

Categories

Tech |