Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. அள்ளித்தரும் அரசு…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தேசிய தலைநகர் டெல்லியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு இன்று நடந்தது. அதில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் திட்டத்தின் மூலமாக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழக முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடு இன்றி உணவு பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அரசு கடந்த 40 வருடங்களாக அனைவருக்கும் ஆன பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் தான் திகழ்கிறது. மேலும் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் தோறும் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ ஆட்டா மாவு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா காலத்தில் நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 4000 ரூபாய் பணத்தை வழங்கியது.

மேலும் பொங்கல் பரிசாக 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறக்கூடிய பரிவர்த்தனைகளில் 98 சதவீதம் அளவு கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் மோசடிகள் எதுவும் நடைபெறாமல் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசு உறுதி செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |