Categories
தேசிய செய்திகள்

“நான் தப்பு பண்ணா என்னை மன்னிச்சிடுங்க”…. டிடிஎஃப் வாசன் ட்விட்…..!!!!!

2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலம் என்று சொல்லபடுபவர் டிடிஎஃப் வாசன். யூட்யூபரான இவர் கோவையை சேர்ந்தவர் ஆவார். தன் பைக்கில் பல்வேறு இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதனை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவருக்கு 27 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர். பெரும்பாலான யூட்யூபர்கள் இருந்தாலும் இவருக்கு 2k கிட்ஸில் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமா பிரபலத்திற்கு இணையாக இவரை காண கூட்டம் கூடுகிறது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை வந்தது.

அப்போது பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வாசனுக்கு வாழ்த்து கூறி பல பரிசு பொருள்களை வழங்கினர். இதையடுத்து சமூகவலைதளங்கள் முழுக்க டிடிஎஃப் வாசனின் பேச்சே ஓடிக்கொண்டிருந்தது . அதேநேரம் டிடிஎஃப் வாசன் அளவுக்கு அதிகமான வேகத்துடன் வண்டி ஓட்டுவதாகவும், இது சிறுவர்களை தவறாக வழிநடத்தும் என்றும் பேச்சு எழுந்தது. அதுமட்டுமின்றி அவர் 240 கி.மீட்டரில் பைக் ஓட்டிய புகைப்படத்தையும் சிலர் பகிர்ந்து ட்விட்டர் வாயிலாக காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதன் காரணமாக வாசன் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில் வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “கடந்த சில தினங்களாக என்னை பற்றி எதிர்மறையாக பேசுகிறார்கள். மேலே குறிப்பிட்டவாறு பைக்கை அதிவேகமாக ஓட்டுங்கள் என நான் யாரையுமே ஊக்கப்படுத்தவில்லை. ஒருவேளை அவ்வாறு நான் ஊக்கப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இதனிடையில் 240 கிலோ மீட்டர்  வேகத்தில் சென்றது பைக்கின் செயல்திறனை சோதிப்பதற்காக மட்டும் தான். ஆனால் ஒருசில செய்திசேனல்கள் என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கின்றனர்” என அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |