தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ஷிப்டு முறையில் பள்ளிகளை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து தொற்றுப் பரவலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் உச்சம் தொட்டு வருகின்றது. பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளனர்.
ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. மாணவர்களின் நலனை கருதி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் வகுப்பறையில் நெருக்கமாக அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது காலை மாலை என இரண்டு ஷிப்டாக வகுப்புகளை நடத்தலாமா? என தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. இது தவிர 10,11, 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்தால் பாதுகாப்பானதாக இருக்கும் என்று பள்ளி நிர்வாகிகள் யோசித்துள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஒரு சிலர் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டு இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே விரைவில் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.