Categories
தேசிய செய்திகள்

“ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட 8 பேர்”… வெளிவந்த உண்மைகள்…. 16 பேருக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்ட நீதிமன்றம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து இருக்கிறது. சென்ற 2011 ஆம் வருடம் ஜூலை 11ம் தேதி காரில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீது எதிரேவந்த டிரக் மோதியதில் 8 பேர் பலியாகினர். இதையடுத்து விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்புதான் இது திட்டமிட்ட சதி என்பதைக் கண்டறிந்தனர்.

அதாவது ரௌடி விக்கி தியாகி, மற்றொரு ரௌடியான உதய் வீர் சிங்கை, குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட அவர்கள் வந்த கார் மீது டிரக்கை மோதச் செய்து கொன்றுள்ளது தெரியவந்தது. இதனிடையில் விசாரணை நடந்துகொண்டிருந்த போதே நீதிமன்ற வளாகத்துக்குள் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் ரௌடி தியாகி கடந்த 2015 ஆம் வருடம் சுட்டுக்கொல்லப்பட்டார்.  பின் கொலை வழக்கில் ரௌடி தியாகியின் மனைவி மீனு உட்பட 16 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |