Categories
தேசிய செய்திகள்

“காரில் செல்வதைவிட விமானத்தில் போகும் கட்டணம் குறைவு”…. மும்பை நபர் வெளியிட்ட டுவிட் பதிவு…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷ்ரவன்குமார் சுவர்ணா வசித்து வருகிறார். இவர் ஜூன் 30 ஆம் தேதி பணிமுடிந்து வீடு திரும்பும்போது கனமழை பெய்ததால், யூபர் காரில் செல்ல முடிவெடுத்துள்ளார். அப்போது தன் கைப்பேசியிலுள்ள யூபர் செயலியில் தான் இருக்கும் இடத்தில் இருந்து வீட்டிற்கான கட்டணத்தை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சுமார் 50 கி.மீ. பயணத்திற்கு சிறியரக காருக்கு ரூபாய் 3,041.54, பிரீமியர் ரக காருக்கு ரூபாய் 4,081.31, எக்ஸ்எல் ரக காருக்கு ரூபாய் 5,159.07 என கட்டணம் காட்டி இருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷ்ரவன் குமார், ட்விட்டரில் அந்த கட்டணப் படத்தை பகிர்ந்துள்ளார்.

அவற்றில், வீட்டிற்கு வாடகை காரில் செல்வதை விட கோவாவிற்கு விமானத்தில் போகும் கட்டணம் குறைவு என அதிருப்தியுடன் பதிவிட்டு இருந்தார். 1 கிலோ மீட்டருக்கு ரூபாய் 10 கட்டணம் வசூலித்தால் கூட, 50 கி.மீ.க்கு 500 ரூபாய்தான் ஆகும் என்று கமெண்ட் செய்யும் பல பேரும் தங்களது அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் யூபரில் ரூபாய் 5,159 கட்டணம் செலுத்தி செல்வதை விட நாசிக்கில் எந்த சிரமமும் இன்றி குடியிருப்பு வாங்கிவிடலாம் என சித்தார்த் ஜெயின் என்பவர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். ஷ்ரவன் குமாரின் பதிவு வேகமாக சமூகஊடகங்களில் பரவிவரும் சூழ்நிலையில், யூபர் நிறுவனம் விரைவில் இதற்கு தீர்வுகாண வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |