தேவையான பொருள்கள்
வரகு அரிசி – அரை கப்
அரைத்த தக்காளி விழுது – அரை கப்
நீளமான நீளமாக நறுக்கிய வெங்காயம் – 4
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க
கடுகு – கால் தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 1
எண்ணை – ஒரு மேசைகரண்டி
செய்முறை
வரகு அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும் .குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும். கடுகு, பட்டை, கிராம்பு, தாளித்து, வெங்காயம் ,போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை, சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அரிசியை உப்பு சேர்த்து. 4 விசில் வரும் வரை வேக விடவும். சுவையான வரகரிசி தக்காளி சாதம் தயார்.