Categories
சினிமா

காளி போஸ்டர் வெளியீடு…. நடிகை குஷ்பு கண்டனம்…. எதற்காக தெரியுமா?….!!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியதன் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டவர்தான் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப் படங்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்கு முறை குறித்து இவர் இயக்கிய மாடத்தி படம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றது.

இதன் வாயிலாக கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்கு முறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பல கவிதைகளை எழுதியுள்ளார். இப்போது லீனா தான் இயக்கியிருக்கும் காளி எனும் ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். காளிவேடத்தில் உள்ள பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம் பெற்றிருந்தது.

இது இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த சர்ச்சை தொடர்பாக இயக்குனர் லீனா மணிமேகலை சமூகவலைத்தளத்தின் மூலம் விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் நடிகை குஷ்பு, காளி ஆவணப் படத்தின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இப்பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |