நீலகிரி மாவட்டம் கூடலூரில் இனி வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்க்க தடை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பந்தலூர் பகுதிகளில் வனத்துறையினர் பல்வேறு வனச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்பொழுது புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் முதல் கட்டமாக வீடுகளில் செல்லப் பிராணி வளர்ப்பது போல் கிளி, மைனா போன்ற பறவைகளை இனி வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீறி வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.