Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வரும் ஜூலை 8 ஆம் தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மதுரையில் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேலைவாய்ப்பு மைய துணை இயக்குனர் சண்முகசுந்தர் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரை மாவட்டம் கோ. புதூரில் உள்ள வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் ஜூலை 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்தவர்கள் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும் ஐடி ஐ, நர்சிங், தட்டச்சர், சுருக்கு எழுத்தர் மற்றும் பிசியோதெரபி படித்தவர்களும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் . முகாமிற்கு வரும்போது தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை,குடும்ப அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |