வங்கக் கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று முதல் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.அங்கு அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 2.54 மணி அளவில் போர்ட் பிளேயர்க்கு தென்கிழக்கு 244 கிலோ மீட்டர் தொலைவில் விக்டர் அளவு கோடு நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 5.57 மணிக்கு 5.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. வளைகுடாவில் இருந்து 44 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாநில முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் மீனவர்களும் கரையோரம் வசிக்கும் பொது மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.