அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 246 வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் பல்வேறு மாகானங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் புறநகரப் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது சுதந்திரத்தின் அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கி கொண்டு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். மேலும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற நபரை கைது செய்ய நடவடிக்கை போலீசார் மேற்கொண்டு வருகிறனர். இந்த துப்பாக்கிச் சூடிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.