Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கிய படகுப் போக்குவரத்து…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு  குற்றாலத்திற்கு குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக செல்வார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக குண்டாறு அணையில் படகு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அணையில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இங்கு ஒரு படகு மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு படகை இயக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அணையில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு உடை மாற்றுவதற்கான அறைகள் மற்றும் சுகாதார அலுவலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இருக்கிறது.

Categories

Tech |