Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“விடிய விடிய பெய்த கனமழை”…. மரம் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் சேதம்….. பாதிப்புகுள்ளான போக்குவரத்து….!!!!!

கூடலூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சென்ற சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் விடிய விடிய பலத்த கனமழை பெய்த பொழுது காலை 8 மணி அளவில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஹெல்த் கேம்பிற்கு செல்லும் சாலையோரம் காய்ந்த மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.

மேலும் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்களை வேறு பாதையில் மாற்றி இயக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதையடுத்து காலை 11 மணியளவில் மின்விநியோகம் சீரானது.

Categories

Tech |