சட்ட விரோதமாக காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த காரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரின் ஓட்டுநர் காரை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.