Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“காரில் கடத்தி வரப்பட்ட 1 லட்சம் மதிப்பிலான சாராயம்”…. 2 பேர் கைது…!!!!

காரில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.

தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்திச் செல்வதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது 50 மூட்டைகளில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராயம் இருந்ததையடுத்து காரில் வந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் பாபு மற்றும் பழனிவேல் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் புதுச்சேரியிலிருந்து காரில் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

Categories

Tech |