தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை பாஜகவின் துணை தலைவர் சசிகலா புஷ்பா திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் விளையாட்டு மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடியில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து திமுக அரசு மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. திமுகவின் அராஜகப் போக்கு அதிகமாகி விட்டது. அமைச்சர்களின் ஊழல்களை அண்ணாமலை அமல்படுத்தி வருகிறார். திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டு ஊழல் தான் காரணம். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இனியும் இருக்காது. எனவே மகாராஷ்டிராவில் நடந்தது போல தமிழகத்திலும் எப்போது வேணாலும் ஆட்சியை மாற்றம் நடக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.