இந்தியாவில் நிலவிவரும் பொருளாதாரம் அந்த நிலையால் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் சுமார் 22,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிரஞ்ச்பேஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஓலா, அன் அகாடமி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 60 ஆயிரம் ஊழியர்களை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இழக்கும் எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் நிதிச்சுமையை குறைக்கவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகளை கொண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் தொழில்நுட்பம் சார்ந்த ஆன்லைன் கல்வி முறைக்கு பலரும் மாறினர். இதையடுத்து இந்த ஸ்டார்ட் நிறுவனங்கள் கோவிட் ஆரம்பத்தில் பெரும் வளர்ச்சி கண்ட நிலையில் ஊரடங்கு முடிந்த நிறுவனம் தற்போது சரிவை கண்டு வருகின்றன.