Categories
மாநில செய்திகள்

“தற்காலிக ஆசிரியர் நியமனம்”…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

பள்ளிக்கல்விதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது “தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எந்த வித சர்ச்சையும் கிடையாது.

முதல்வரின் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடந்து வருகிறது. அத்துடன் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. ஆகவே எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இது தொடர்பான வழுகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடப்படும். அதன்பின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதி, மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |