தமிழகஅரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதில் எவ்வித சர்ச்சையும் கிடையாது. தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜாதி மத கூட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.முதல்வரின் அறிவுரை படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.