Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ் இந்தியா அழகி போட்டி…. பட்டம் வென்ற 21 வயது பெண்…. வெளியான தகவல்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜியோ உலக மாநாடு மையம் அமைந்துள்ளது. இங்கு வி.எல்.சி.சி ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சினி ஷெட்டி வெற்றி பெற்றார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரூபல் ஷெகாவத் இரண்டாவது இடத்தையும், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான் மூன்றாவது இடத்தையும் பெற்றார். இந்த தகவல் மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/Cfj0uGHPZy2/?utm_source=ig_embed&ig_rid=13e764fd-e5b9-4162-815d-9552790575d6

அதில் வசீகரமான அழகு மற்றும் காந்த பார்வை உள்ளிட்டவற்றால் சினி  ஷெட்டி அனைவரையும் கவர்ந்திழுத்தார் எனவும், உலக அழகி போட்டியில் சினி ஷெட்டி வெற்றி பெற்று நாட்டை பெருமைப்படுத்துவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக சினி ஷெட்டி மும்பையில் பிறந்தார். இவர் இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். மேலும் 21 வயதாகும் சினி ஷெட்டி ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.

Categories

Tech |