Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் முல்லா என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும்  கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். அதன்படி நேற்று தாசில்தார் கணபதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள 66 வீடுகள் மற்றும் 95 கடைகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

அதன்பின்னர் அதிகாரிகள் கூறியதாவது. உயர் நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் காவல்துறையினர் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |