பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதன்பிறகு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கோடை விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதாவது 34 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் வெளுத்து வாங்குவதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களுக்கு இன்று முதல் ஜூலை 14-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.