Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 1 ம் தேதி முதல் பள்ளிநேரம் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணிவரை செயல்பட தொடங்கியுள்ளது. இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதை கருத்தில்கொண்டு, ஹரியானா அரசு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிநேரத்தை முன்னதாகவே மாற்றி இருக்கிறது. கோடை விடுமுறைக்கு முன்பு அம்மாநிலத்தில் பள்ளிகள் தினமும் 5 மணிநேரம் மட்டும் நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் நிலவும் கடும் வெப்பஅலை காரணமாக அனைத்து பள்ளிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரம் காலை 7 மணிமுதல் மதியம் 12 மணி வரை எல்லா வகுப்புகளுக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டு மே 4 ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது நாம் அறிந்ததே ஆகும். தற்போது அதே நேரத்தில் பள்ளிகளைத் தொடர அரசு முடிவு செய்து இருக்கிறது. எனினும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பள்ளிகளுக்கு வருகைபுரிய வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் புதுப்பிக்கப்பட்ட நேரத்தைப் பின்பற்றவும், பள்ளிகளை மீண்டும் திறக்கும்போது தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் அரசு வலியுறுத்தி இருக்கிறது. ஹரியானா மற்றும் நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் காரணமாக உருவாகும் கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

Categories

Tech |