Categories
சினிமா

புஷ்பா பட பாணியில் இறங்கிய அஞ்சலி…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

அங்காடிதெரு படத்தின் வாயிலாக பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். முன்னதாக அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியாகிய சைலன்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்போது இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் ஆர்சி15 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகிவரும் “மச்சேர்லா நியோஜகவர்கம்” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை சமூகவலைத்தளத்தில் அஞ்சலி பகிர்ந்துள்ளார். புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா அணிந்திருந்த கவர்ச்சிஉடை போல் அஞ்சலியின் கெட்டபும் அமைந்து இருப்பதால் இந்த  பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்போஸ்டர் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

Categories

Tech |