Categories
உலக செய்திகள்

கடற்கரையில் குளித்துக்கொண்டிந்த 2 பெண்கள்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. எகிப்தில் சோகம்…..!!!!!

செங்கடல் பகுதியில் எகிப்தின் ஹூர்ஹடா மாகாணமானது உள்ளது. இங்கு உள்ள கடற்கரையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஹூர்ஹடா மாகாணத்திலுள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் சென்ற சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து இருந்தனர். இதில் சில பேர் கடலில் குளித்துக் கொண்டிந்தனர்.

அப்போது கடற்கரையில் நீச்சலடித்து குளித்துக் கொண்டிந்த 2 பெண்களை சுறா தாக்கியது. அவ்வாறு சுறா தாக்கியதில் பலத்த காயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அந்த 2 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த 2 பெண்களும் ஆஸ்திரேலியா, ரூமெனியா நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |