Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாகையில் களைக்கட்டி வரும் புத்தக திருவிழா”…. இன்றுடன் நிறைவு….!!!!!

நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் புத்தகத் திருவிழாவானது சென்ற 24ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகின்றது. இது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த புத்தக விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 110 பதிவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த திருவிழாவில் 114 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டு கவிதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி புத்தகங்களும் இடம்பெற்றிருக்கிறது. விழாவின்போது தினம் தோறும் மாலை 3 மணியிலிருந்து ஆறு மணி வரை மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் தமிழறிஞனர்களின் கருத்தரங்கங்களும் சிந்தனையரங்கங்களும் நடைபெற்ற வருகின்றது. இங்கே ஆயிரக்கணக்காணோர் தினமும் ஆவலுடன் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

Categories

Tech |