Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு” தினத்தை முன்னிட்டு….. பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரை அறிஞர் அண்ணா சூட்டினார். இவர் பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதியை ஆண்டுதோறும் ‌தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறோம். அதேப்போன்று நடப்பாண்டிலும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட வாரியாக உள்ள அனைத்து பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்துவதற்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 7-ம் தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தேனி மாவட்ட கூட்டாட்சி கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டிகள் கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு, எல்லைப் போர் தியாகிகள், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்டதில் தந்தை பெரியார், சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, தமிழ்நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள், மொழிவாரி மாகாணம், தமிழ்நாடு உருவான வரலாறு உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி உரிய சான்றிதழை வாங்கி விண்ணப்பித்து முதன்மை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மேலும் போட்டியில் வெற்றி பெறும் மாணவ – மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 7,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படும்.

Categories

Tech |