இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மாரீஸ்வரன் என்பவரை காயத்ரி காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதால் காயத்ரி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த காயத்ரி மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயத்ரியை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.