Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 17 வயது சிறுமி…. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால்ராஜ்(24) என்ற மகன் உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு பால்ராஜ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதும் பால்ராஜ் துபாய்க்கு தப்பி சென்றுவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் பால்ராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.

இந்நிலையில் பால்ராஜ் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் பிடித்து திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் அங்கு விரைந்து சென்று பால்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |