மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் சேங்கல் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி அவர் அரைகுறையாக இருக்கும் புகைப்படங்களை நிலவொளி அனுப்ப வைத்துள்ளார். பின் அதனையும் பார்த்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பொதுமக்களுடன் இணைந்து பள்ளிக்கு சென்று ஆசிரியரை அடித்து உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆசிரியரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் நிலவொளியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.