மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த கவின் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இறந்தவரின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் முத்தலகுறிச்சி பகுதியை சேர்ந்த தபசுமால்(30) என்பது தெரியவந்துள்ளது.
இவர் குடிநீர் தயாரிக்கும் கம்பெனியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தபசுமால் தனது நண்பர்களான சோபின், கவின், நிஷாந்த் ஆகியோரும் அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு 2 மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் தக்கலை பேருந்து நிலையம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நண்பர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து நேர்ந்தது தெரியவந்தது.