பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைபட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.இந்த அனைத்து கிராமங்களுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறைபட்டி பகுதியில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறி தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள இளம்மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.