இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். இது கிட்டத்தட்ட அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமானதாக மாறிவிட்டது. ஆதார் கார்டு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களின் தனிப்பட்ட அடையாளச் சான்று.
இது UIDAI மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் உங்களின் அடையாளம்,முகவரி சான்று மற்றும் வயது சான்றுக்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக செயல்படுகின்றது. இந்த ஆதார் அட்டை ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாக கூடியது. ஒரு நபர் உயிரிழந்து விட்டால் அந்த ஆதார் அட்டை செல்லாது.
இது வழங்கப்பட்டவுடன் வாழ்நாள் முழுவதும் அமலில் இருக்கும் என்று பொருள்.ஆனால் சமீப காலமாக ஆதார் அட்டையில் நிறைய மோசடிகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. என் நிலையில் நம்பகத் தன்மை காரணமாக பல ஆதார் அட்டைகளை அரசு செயலிழக்க செய்துள்ளது. அதாவது ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட காடுகள் இருந்ததால் பல காடுகள் செயலிழந்தன.
இந்நிலையில் உங்களுடைய ஆதார் கார்டு செல்லுபடி ஆகுமா இல்லையா என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் UIDAI இன் அதிகாரப்பூர்வை இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அதன் இணையதளத்தில் சென்றவுடன் verify Aadhar number என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்களது ஆதார் கார்டு செல்லுபடி ஆகுமா இல்லையா என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.