அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை, தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறி உள்ளது. இதற்கிடையில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவாக 15,000 ஆஸ்திரேலியர்கள் அமெரிக்க கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்த பேரணியில் 15 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பாதகைகளுடன் பேரணியாக சென்றனர். ஆஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகளுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமெரிக்காவில் இப்போது இருப்பது போல ஆஸ்திரேலியாவில் கருக்கலைப்பு சட்டங்கள் அந்தந்த மாநிலங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் நியூ சவுத் மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டில் தான் கருகலைப்பு சட்டபூர்வமாக ஆக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் கருக்கலைப்பு நடைமுறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கெடுபிடிகள் தளர்த்தப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.